Welcome

Know More
அறிவிக்கப்படாதவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதே எங்களுடைய வாஞ்சை.
இமயமலையின் தொலைதூர சிகரங்களில் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களை சந்திக்க நாங்கள் எங்களை அர்ப்பணித்திருக்கிறோம். இந்த சிகரங்களை அடைவது எல்லா விதத்திலும் மிகவும் கடினமான ஒரு பணியாகும். உடனடியான பலனை வாக்களிக்காத, கண்ணீரோடே விதைக்கிற இந்தப் பணியை மேற்கொள்ள மனமுள்ளவர்கள் அநேகர் இல்லை. ஒருசில வீடுகள் மட்டுமே காணப்படும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் அந்தச் சிலருக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்வதற்காகத் தங்கள் ஜீவனை அர்ப்பணிக்க மனமுள்ளவர்கள் மட்டுமே இப்பணியை செய்ய முடியும்.

இமயமலையில் வாழும் மக்களிடையேயான ஊழியம், ஒரு ஆடம்பரமான வாழ்க்கையையோ புகழையோ வாக்குப்பண்ணாது; தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என்பதையும் அது உறுதியளிக்காது. இது முற்றிலும் ஒரு தியாகமான ஊழியமாகும்; இதில் பவுலைப்போல, ஒருவர் தன் ஜீவனைத் தேவனுக்கு முன்பாக சுகந்த வாசனையாகப் பானபலியாய் வார்க்க வேண்டியிருக்கும் (2 தீமோத்தேயு 4:6).

தற்சமயம் திபெத் மூடப்பட்டுள்ளது, ஆனாலும் நேபாளத்தில் வசிக்கும் திபெத்தியர்களைச் சென்றடைய முடியும். எங்களை தாங்கும்படி நீங்கள் நடத்தப்படுவீர்களானால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Get in Touch